அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பிய தொண்டர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

0
62

சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த சசிகலா வெளியே தலையை நீட்ட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் சசிகலா தன்னுடைய வேலையை தொடங்கினார்.

அதாவது அதிமுகவை கைப்பற்ற போவதாகவும், விரைவில் தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும், சசிகலா தற்போது வரையில் தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி வரும் மதிமுக தொண்டர்களை அந்த கட்சியின் தலைமையை அதிரடியாக நீக்கி வருகிறது. ஆனாலும் சசிகலா தொடர்ச்சியாக அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார

இதற்கிடையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டி வருகிறார்கள். இது அந்த கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி சுரேஷ் என்பவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்த நோட்டீஸில் அதிமுகவிலிருந்து யாரையும் நீக்குவதற்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் கிடையாது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு கட்சியின் தலைமைக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.