சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

0
77

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சந்தானம் வருட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்றையதினம் ஆகியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அதன்பிறகு தினகரனின் முயற்சி காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா அவருடைய தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் மாதம் மூன்றாம் தேதி அவர் சென்னைக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக அடைக்கப்பட்டார் சசிகலா சசிகலா இரண்டு முறை பரோலில் வந்திருக்கிறார். அவர் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,அதே போல சசிகலாவிற்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ௧௦ கொடியே 10 ஆயிரம் ரூபாயை அவர் முன்பே செலுத்திவிட்டார் . இதனையடுத்து இன்றைய தினம் பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் விடுதலைக்கான ஆவணங்களை சசிகலா சிகிச்சையில் இருந்த மருத்துவமனைக்கு வந்து சரிபார்த்த பிறகு காவல்துறையினர் விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

ஆகவே இன்றைய தினம் சசிகலா விடுதலையானார். அவர் முற்றிலுமாக குணமடைந்து இருக்கின்ற நிலையில், சசிகலா சுமார் ஒரு வார காலம் ஓய்வில் இருந்து விட்டு அதன் பிறகு அடுத்த மாதம் மூன்றாம் தேதி சென்னைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலா சிறையில் இருந்து விடுதலை அடுத்து அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக பின் கொண்டாடி வருகிறார்கள். சசிகலாவின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பது மக்கள் மத்தியில் ஒரு கருத்தாக உலாவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.