விடுதலையாகிறார் சசிகலா! உள்த்துறைசெயலாளர் அவசர ஆலோசனை!

0
74

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் கைதியாக இருக்கும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்த சிறையின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

பெங்களூர் சிறையில் இருந்து வரும், இளவரசி, சசிகலா சுதாகரன், ஆகியோரின் தண்டனை காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. மூன்று பேரின் விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு பதில் அளித்திருக்கிற சிறை நிர்வாகம், மூன்று பேருக்கும் ரெமிஷன் கழிப்பு கிடையாது என தெரிவித்து சிறை சட்டப்புத்தகத்தில் இருக்கின்ற 3பக்க விதிமுறை நகலை இனைத்திருக்கின்றது.

ஆனாலும், விசாரணை கைதியாக இருந்த தினங்கள், பரோலில் வெளியே சென்ற தினங்களை கடித்துவிட்டால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் சசிகலா விடுதலை அடையலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், கர்நாடக உளவுத்துறை அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கு ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கின்றது. அதில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சசிகலா விடுதலை பெற்றால், அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு வரக்கூடும் இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்திருக்கின்றது.

கர்நாடக மாநில உள்துறை செயலாளர், ரூபா கடந்த வாரம் டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றார். அதில் கர்நாடக உள்துறை செயலாளர் ரூபா பேசும் பொழுது ஜனவரி கடைசியில் சசிகலா விடுதலை அடைந்தால், கர்நாடக மாநிலத்தில் கூட்டத்தை நெருங்கவிடாமல் தமிழக எல்லையிலேயே தடுத்திட வேண்டும். தமிழ் நாட்டில் எது நடந்தாலும் நமக்கு பிரச்சனை கிடையாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

இவ்வாறு இருக்க சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி வரையில் சசிகலா தரப்பில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் ஜனவரியில் தூசித்தட்டப்படலாம் என சொல்கிறார்கள்.