அதிமுகவை உடைப்பதற்கு பக்காவாக திட்டம் போடும் சசிகலா! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

0
91

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வெளியே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், சசிகலா விடுதலை ஆனால் அதிமுக நான்கு அணிகளாக , உடைய வாய்ப்பிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்ற 1994-95 காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்கில், உள்ள தொகையை குறிப்பிடாமல் இருந்தது. இதனை வருமான வரி மதிப்பீட்டு அறிக்கையாளர் இதனை சுட்டிக் காட்டி சசிகலாவிற்கு எதிராக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வருமானவரிதுறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை ஆணையர் சென்ற 2008ஆம் வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். ஆகவே அவர் வெளியே வந்தால் சில விளக்கங்களைப் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

சசிகலா வெளியே வந்தால், அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அமைச்சர்கள் பலர் சசிகலாவின் ஆதரவாளர்கள் என பேசப்பட்டு வருகின்றது.

இந்த சூழ்நிலையில் , சசிகலா விடுதலை சம்மந்தமாக கருத்து தெரிவித்திருக்கின்றார் ,முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் சசிகலா விடுதலை ஆனவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீண்டு எழும் என்று பேசப்படுகிறது. ஆனால் அதிமுக, அம்மா திராவிடம், பெரியார் திராவிடம், என்று நான்காக உடைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.