மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

0
84

சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக யாரும் பயப்பட வேண்டாம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் என்ற நான்கு வருட காலமாக சிறை தண்டனையில் இருந்து வரும் சசிகலா தன்னுடைய தண்டனை காலம் முடிந்து வருகிற 27ம்தேதி வெளியே வர இருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், சிறை வளாகத்திலேயே முதல்கட்ட பரிசோதனை நடைபெற்றது. இதன் மூலம் சசிகலாவிற்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் இருக்கின்ற போரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவசர ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்ட சசிகலா சர்க்கர நாற்காலியில் வார்டிற்கு அழைத்துவரப்பட்டார். இதனைத்தொடர்ந்து சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சுத்திணறல் இருந்தாலும்கூட காய்ச்சல் இருப்பதனால், அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். சசிகலா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், சசிகலா தற்போது சிகிச்சையில் இருந்து வரும் பெங்களூர் சிவாஜிநகரில் இருக்கின்ற போரிங் மருத்துவமனையில் வந்து சேர்ந்தார் டிடிவி தினகரன். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர், சசிகலா உடல் நிலை தொடர்பாக எந்த ஒரு பயமும் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். அதோடு கடந்த ஒரு வார காலமாக சசிகலா காய்ச்சல் காரணமாக அவதியில் இருந்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. சசிகலாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா இல்லை என்று தெரியவந்திருக்கிறது. இருந்தாலும் அவருக்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கின்றது அதன் காரணமாக, ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்கேன் தேவையா என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகலாவை சந்தித்த பிறகு முழுமையான விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்க இயலும் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.