ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

0
288

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள நினைத்த சசிகலா அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதிமுகவின் அடுத்த பொது செயலராகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆனார்.

எடப்பாடி முதல்வர் பொறுப்பேற்ற பின் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது, இந்த நிலையில் திடீரென சிறைக்கு சென்றார் சசிகலா, இதையடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு ஆட்சி நடத்தினார் எடப்பாடி பழனிசாமி, சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கினார்கள் எடப்பாடியும், பன்னீர்செல்வமும்.

அன்றிலிருந்து இன்று வரை அதிமுகவை கைப்பற்றி ஒன்றிணைத்து மீண்டும் கட்சியை தன் வசம் கொண்டு வர முயற்சி செய்து வரும் சசிகலா, நேற்று சட்டசபையில் எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மோதி கொண்டது குறித்து பேசிய சசிகலா, சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதா குறித்து ஒவ்வொரு உறுப்பினர்களும் பேசுவதற்கு உரிமை உள்ளபோது, எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்றும், தான் இப்படி பேசுவது பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பேசுவதாக அர்த்தம் இல்லை என்றும், பொதுவான முறையில் பேசுவதாகவும் தெரிவித்தார் சசிகலா.

தற்போதுள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்த தன்னால் ஆனா எல்லா முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும், யாரிடம் அதிமுகவின் தலைமை பொறுப்பு சென்றால் நன்றாக இருக்கும் என்ற முடிவை கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அதிமுகவின் தொடர் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் காரணம், எனவே பிரிந்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவை மாபெரும் வெற்றியடைய செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.