பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்! பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகிறாரா சசிகலா?

0
71

கடந்த 2017ஆம் வருடம் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, உள்ளிட்ட 4 பேரின் மீது இருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது.

இந்தத் தீர்ப்பில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜெயலலிதா உயிரிழந்து விட்டபடியால் சசிகலா, சுதாகரன், இளவரசி, உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களை பரப்பன அக்ரஹார சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

அதன்படி சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.இந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதம்7ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு பெங்களூரு 24வது பெருநகர நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமிநாராயணன் முன்னிலையில் இன்று நடைபெறவிருக்கிறது சசிகலா இளவரசி உட்பட 7 பேரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக அவர்கள் எல்லோரும் இன்று விசாரணைக்கு ஆதரவாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.