அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

0
55

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தை தொடர்புகொண்டு அதிமுகவிடம் தன்னுடைய கட்சியை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சியை இணைக்க தயார் எனவும், பாரதிய ஜனதா கட்சி சொல்வது படி நடப்பதாகவும், உறுதியளித்திருக்கிறார் டிடிவி தினகரன். இதற்கு ஒருசில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். அமித்ஷா மட்டும் இதுவரையில் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிமுகவை கைப்பற்றுவதற்கு சசிகலா தரப்பு திட்டமிட்டதாக தெரிகிறது. ஆகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தன்னுடைய ஆதரவு தலைவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் சசிகலா என்றும் சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் என்னுடைய கட்சியை அதிமுகவுடன் இணைத்து விடுகின்றேன், அதோடு என்னுடன் தகராறு செய்த தலைவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருக்கிறாராம். ஆனாலும் இந்த விஷயத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்கவில்லை. சசிகலாவிடம் கட்சியை கொடுத்துவிட்டால் அது ஜாதி சங்கமாக உருமாறி விடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தற்போது அப்படித்தான் இருக்கிறது என்று முதல்வர் கருதுவதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில பிரிவினர் மட்டுமே வாக்கு செலுத்தக்கூடிய ஒரு கட்சியாக தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கிறது. ஆகவே எந்த காரணத்தை முன்னிட்டும் சசிகலாவிடம் கட்சியை ஒப்படைக்க இயலாது, 40 தொகுதிகளும் தர இயலாது ,என்று முதல்வர் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒரு சில தொழிலதிபர்கள் மூலமாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திவரும் சசிகலா 40 தொகுதிகள் கொடுத்தால் மட்டும் போதும் அதிமுகவுடன் கட்சியை இணைக்க கூட தேவையில்லை கூட்டணி வைத்தால் போதும் என தெரிவித்து இருக்கிறாராம் இதற்காக பாஜகவின் வேட்பாளர்களுக்கான தேர்தலில் மொத்த செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்கிறோம் எனவும், கட்சி நிதியாகவும் பணம் தருகிறோம் என்று உறுதி அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இதுதொடர்பாக புதுடில்லியில் இருந்து எந்த ஒரு மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை. அதேவேளையில், அவர்களுக்கு சாதகமான பதிலும் வரவில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், அவர்களுக்கான கதவு திறந்து இருப்பதாக தான் டிடிவி தினகரனும் , சசிகலாவும் நினைக்கின்றனர். இதன் காரணமாக டெல்லியில் இருக்கின்ற தொழிலதிபர்கள் மூலமாக கூட்டணிக்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்து செய்து வரும் சமயத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அமைதியாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.