சசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!

0
58

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவருடைய தோழி சசிகலா நியமனம் செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார். செய்து அதற்க்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோரின் அணியில் ஏற்பட்ட சமரசம் காரணமாக, இரு அணிகள் ஒன்றிணைந்து அதிமுக கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டிடிவி தினகரனை, நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக, இந்த பொதுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து சசிகலா டிடிவி தினகரன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கானது இன்று வரையில் நிலுவையில் இருக்கிறது சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இடப்பாடி பழனிச்சாமி அதோடு அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருவதன் காரணமாக, இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக தெரிவித்தார் டிடிவி தினகரன். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த சங்கத்தில் சசிகலாவின் தரப்பிலிருந்து இந்த வழக்கில் டிடிவி தினகரன் விலகி விட்டதன் காரணமாக, அவருடைய பெயரை நீக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தாலும் இந்த திருத்த மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது என விசாரணை செய்வதற்காக இதன் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.