குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

0
107

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும் வருகின்றன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் புணரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன்‌ காரணமாக ஏரி குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து மீட்டும் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக, நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருபவர்கள் முக்கியமானோர் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தான். இவர்களிடமிருந்து ஏரி குளங்களை மீட்டு திட்டப்பணிகளை செய்வது வருவாய் துறையினருக்கு சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் அதிகாரவர்க்கம் இன்னொரு பக்கம் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பு இவை எல்லாவற்றையும் சமாளிப்பது அவ்வளவு சுலபம் அல்ல, இருந்தாலும் நேர்மையான அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் தங்கள் கடமையை செய்து வருகின்றனர். ‌

தமிழக அமைச்சர்களின் பினாமிகளுக்கும் மற்றும் ஆளுங்கட்சியினருக்கும் தான் குடிமராமத்து பணிகளுக்கான ஒப்பந்த பணிகள் தரப்படுவதாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

நீர்நிலைகளை தூர்வாரும் போது வண்டல் மண் போன்ற கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் எதிர்கட்சிகள் வைக்கின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் கனிம வளங்கள் வருவாய் துறையினர் உதவியுடன் தான் கொள்ளையடிப்பதாக புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர், கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுவான கோரிக்கை எழுந்துள்ளது.

எது எப்படியோ அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியினர் கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டு வருவது அரசுக்கு அவப்பெயரை சேர்ப்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K