விவாகரத்துக்குப் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!! சமந்தாவுடன் இருப்பது யார்.!!

0
68

நடிகை சமந்தா விவாகரத்துக்குப் பிறகு ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வந்த காரணமாக நடிகை சமந்தா-நாக சைதன்யா தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக சமூகவலைதளங்களில் வதந்தியாக வெளிவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்து அறிவித்த பிறகு சமூக வலைதளங்களில், எந்தவித புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவுடன் இருக்கும் நபர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.