பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்

0
58

கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் மூலம் தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2ன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.