ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

0
133
Salary increase from Rs 15,000 to Rs 40,000! Jackpot to score for nurses!
Salary increase from Rs 15,000 to Rs 40,000! Jackpot to score for nurses!

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா தொற்றின் 2- வது அலை தற்போது அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவலை தடுக்க மக்களின் நலன் கருதி மாநில அரசுகளும்,மத்திய அரசும் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அமல்படுதயுள்ளனர்.இதனையடுத்து அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் 50%  மட்டுமே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி தந்துள்ளனர்.இந்தநடைமுறையானது நாளை தொடங்குகிறது.20 –ம் தேதி நிறைவடைய உள்ளது.

பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும் தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் 20,956  ஆக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உள்ளது.இந்நிலையில் ஒப்பந்தம்(agreement) அடிப்படையில் 1,212 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது இந்த 1,212 செவிலியர்களுக்கும் நிரந்தர பணி அமர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்தவகையில் தமிழக அரசு கூறியதாவது,தமிழகத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும்.அதுமட்டுமின்றி 2015-2016 ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 1,212  செவிலியர்களும் வரும் 10- ஆம் தேதிக்குள் சென்னையில் பணியில் சேர வேண்டும்.அதனையடுத்து இவர்கள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பர்.அதுமட்டுமின்றி இந்த 1,212 பேருக்கும் சம்பளம் ரூ.15,000- யிலிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த பணி ஒப்பந்தம் நாளையுடன் முடிவடைய இருப்பதால்,இத்தகைய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.