ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு :! காரணம் இதுதான் !!

0
70

 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு , விரைவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 33 ஆயிரத்து 600 விற்பனையாளர்களும், 5,500 எடையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். பொதுவாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி புதிய உதயம் நிர்ணயிக்கப்பட்ட அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் உயர்வு நடைமுறைகள், முடிவுக்கு வர உள்ள நிலையில் , தற்போது புதிய ஊதிய நிர்ணயம் மேம்படுத்துவதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கணிசமாக ஊதிய உயர்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K