அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

0
77

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

கொரோனாவால் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்ப ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது தெலுங்கானா அரசு.

இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாதாரச் சரிவை ஈடு செய்யும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி அமைச்சர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் போன்ற மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத ஊதியம் குறைக்கப்படுகிறது.

மற்றப் பணியாளர்களுக்கு 50 சதவீதமும் அரசு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் ஊதியம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இழப்பை ஈடுசெய்வதற்காக எடுத்திருக்கும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K