தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் நன்மையும் மாலையில் பொறுப்பும் உண்டாகும் நாள்!!

0
122
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் நன்மையும் மாலையில் பொறுப்பும் உண்டாகும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் நன்மையும் மாலையில் பொறுப்பும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக செல்லும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலமாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சிகளும் சற்று கவனமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறைய ஆரம்பிக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நன்மை தரும் செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani