தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பயணம் உண்டாகும் நாள்!

0
55
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பயணமும் ஆதாயமும் உண்டாகும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆதாயமும் உண்டாகும் நாள். காலையில் சந்திர பகவான் சகாயஸ்தானத்தில் இருப்பதால் ஆதாயம் கிடைக்கும். மதியத்திற்குப் பிறகு சந்திர பகவான் சுப ஸ்தானத்திற்கு வருவதால் பயண வாய்ப்புகள் உண்டாகும். நிதி அனுகூலமாக உள்ளது.

கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani