திமுக கட்சி அல்ல ஊழலின் ஊற்றுக்கண்! கடம்பூர் ராஜு ஆவேசம்!

0
67

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது ஊழலின் மொத்த உருவமே திமுக தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் எவ்வாறு செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டிய கட்சிதான் திமுக சர்க்காரியா கமிஷன் விசாரணையின் பொழுது விசாரணை நடத்திய அதிகாரியை ஆச்சரியப்படும் வகையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய இயலும் என்று உலகத்திற்கு எடுத்துக் காட்டிய கட்சி திமுக இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொன்னால் அதிமுக ஆட்சிதான் என்று தெரிவித்தார் கடம்பூர் ராஜு.

காற்றில் கூட 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள் அந்த கட்சியின் ராசாவும் கனிமொழியும் தான் அந்த இருவர் மீதும் வழக்கு தொடுத்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசுதான் ராசாவும் கனிமொழியும் தியாகம் புரிந்துவிட்டா திகார் சிறைக்கு சென்றவர்கள் 2ஜி வழக்கில் ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்து இருவரும் விடுதலை செய்யப்படவில்லை போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது சிபிஐ செய்திருக்கின்ற மேல்முறையீடு வழக்கில் இருவரும் தப்பிக்க இயலாது அந்த பயத்தில்தான் ஸ்டாலினும் ராசாவும் உளறுகிறார்கள்.

சென்ற 2011 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருக்கின்றது இந்த பத்து வருடங்களும் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தும் எதையும் நிரூபிக்க இயலாமல் வாபஸ் வாங்கிய நிலையே இருக்கின்றது சட்டசபையிலேயே எதையும் நிரூபிக்க இயலாதவர்கள் மக்கள் மன்றத்தில் எவ்வாறு நிரூபணம் செய்வார்கள் மக்களிடம் உண்மைக்கு புறம்பான எதையும் தெரிவித்துவிட இயலாது மக்கள் அந்தக் கட்சியை நம்புவதற்கு தயாராக இல்லை ஊழல் என்று சொன்னவுடன் மக்களுக்கு நினைவுக்கு வருவது திமுக தான் ஊழல் பற்றி பேசுவதற்கு அந்த கட்சிக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை கடந்த பத்து வருடங்களாக அதிமுக சார்பில் ஊழலற்ற தெளிவான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகின்றது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் சிறைக்குப் போவார்கள் என்று ஸ்டாலின் மிரட்டி பார்க்கின்றார் மக்களுடைய மதிப்பைப் பெற்று 2021 ஆம் ஆண்டிலும் மறுபடியும் அதிமுக ஆட்சி மலரும் நாங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்ததும் சாதிக் பாட்ஷா கொலை வழக்கு அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசி தட்டி மறுபடியும் விசாரணை செய்யும்போது ஸ்டாலின் சிறைக்கு போவது உறுதி ஆகும் சட்டசபை தேர்தல் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுக பக்கம் வருவார்கள் என்று தெரிவித்த அவர் ஜனவரிக்கு பின்னர் பல கட்சிகள் அதிமுகவை வந்து சேரும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான கூட்டணியாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.