“பேச வேறு ஒன்றும் இல்லை” – சச்சின் டெண்டுல்கர்!

0
65
Sachin comments on T2o worldcup

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், 20 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிககு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான்அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் பவுலிங் என எதிலுமே சோபிக்காத இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வி குறித்து முன்னால் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, “இது நம் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒரு நாளாக அமைந்து விட்டது. இது மாதிரியான நாட்கள் சில சமயங்களில் வருவதுண்டு. நாம் என்ன தான் முயன்றாலும், எதற்குமே பலன் கிடைக்காது. அது மாதிரியான ஒரு நாள் தான் இந்திய அணிக்கும் இந்த போட்டியில் அமைந்துவிட்டது. இதை தவிர இதில் பேச வேறு ஒன்றும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘வரும் நாட்களில் நமது அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது’ எனவும் கூறியுளளார்.

மேலும், நியூசிலாந்து அணி பவுலிங்கில் செலுத்திய உத்வேகத்தை இந்தியா செலுத்த தவறி விட்டதாக நான் உணர்கிறேன். அதே நேரத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் தனது பவுலர்களை மாற்றி மாற்றி ரொடேட் செய்தார். பவர்பிலே முடிந்தது 6 வது ஓவர் முதல் 10 ஓவர் வரையில் இந்திய அணி வெறும் 13 ரன்களை மட்டுமே எடுத்தது. மேலும் ஒரு விக்கெட்டையும் இழந்திருந்தது இந்த ஓவர்களில் தான் இந்தியா ஆட்டத்தை இழந்ததாகவும் நான் பார்க்கிறேன். ஒற்றை இலக்க ரன்களை கூட எடுக்க முடியாத சூழலில் தான் பெரிய ஷாட் ஆட முயன்று நமது பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி சென்றனர்’ என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K