சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்!

0
94

சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்!

நாட்டில் நிறைய தலைவர்கள் சுதந்திரத்திற்காகவும், மண்ணிற்காகவும், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடி தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க நாம் அனைவரும் அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையச்சியார் அவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், போராடியவர் ஆகும்.

அவருக்கு நமது மாநில முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வருடம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது, எஸ் எஸ் ராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சட்ட சபையில் அவரை போற்றும் வகையில் திரு உருவ படம் வைக்கப்படும் எனவும், அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திரு உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கலந்து கொள்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பங்குகொள்ளவில்லை.

ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது டாக்டர் ராமதாஸ் அளித்த ஒரு வாக்குறுதி எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை, மற்ற கட்சிகள் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள்.அந்த வாக்குறுதியை இன்று மீறுவாரா? என பல ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருந்தனர்.

திமுக உள்ளிட்ட கட்சியின் இணையதள உறுப்பினர்களும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தன்னுடைய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாமக சார்பில் தலைவர் ஜிகே மணி, எம்பி அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி கலந்து கொண்டார்கள்.

டாக்டர் ராமதாஸின் கடிதத்தில் தெரிவித்தது என்னவென்றால், “அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்!
உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி!

வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த மக்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்து எதிர்கச்சிகளும் டாக்டர் ராமதாஸ் சட்ட சபையில் கால் பதிப்பரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. எஸ் எஸ் ராமசாமி படையாட்ச்சியார் அனைவரும் போற்றகூடிய மாபெரும் தலைவர் ஆவார். உழைப்பாளர் மக்களின் முன்னேற்றம் அடைய பாடுபட்டவர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K