இந்தியாவிற்கு அடுத்த வாரம் வரவிருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

0
74

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தை, பல நாடுகளிலும்  கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்றழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட உள்ளது. 

இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஏற்கனவே முதல் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த வார இறுதிக்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த மருந்திற்கான முழு உற்பத்தி உரிமையையும் டாக்டர் ரெட்டி’ஸ் என்கின்ற தனியார் ஆய்வக நிறுவனம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியையும் ஏற்கனவே இந்த நிறுவனம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படும் இந்த தடுப்பூசிகள், இந்தியாவின், கான்பூரில் இருக்கும் கனேஷ் சங்கர் வித்யார்த்தி என்கின்ற மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 180 தன்னார்வலர்களை கொண்டு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Parthipan K