ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

0
57
Russia's next bio attack! Warning America!
Russia's next bio attack! Warning America!

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா ஒரு மாதத்திற்கு முன்பே உக்ரைன் மீது போர் தொடுக்க தனது படைவீரர்களை அதன் எல்லையில் நிறுத்தியது. அதற்கு அடுத்த நாளிலே போரைத் தொடங்க ஆரம்பித்துவிட்டது. தற்போது வரை இரு பக்கமும் பல உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது. ரஷ்யா முதலில் உக்ரைனின் தலைநகரை தாக்கியது. மேலும் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றியது. மனிதாபிமானம் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷியா திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

அச்சமயத்தில் உக்ரைன் மக்கள் இதர நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். போரை நிறுத்த வேண்டுமென்றால் உக்ரைனில் உள்ள மூன்று பகுதிகளை தனி குடியரசு களாக அறிவிக்க வேண்டும் என்று ரஷ்யா கேட்டுக்கொண்டது. அதுமட்டுமின்றி நேட்டோ அமைப்புடன் சேருவதை தவிர்க்க வேண்டும் என்று நிபந்தனை போட்டது. அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளும் வகையில் உக்ரைன் அதிபர் செலஸ்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

நேட்டோ அமைப்பு தங்கள் நாட்டை சேர்ப்பதற்கு தவிர்க்கிறது. அதனால் நாங்கள் நேட்டோவில் சேர விரும்பவில்லை என தெரிவித்தார். இது ரஷ்யாவுடன் சமரசமாக பேசுவதில் ஓர் அறிகுறியாக தென்பட்டது. இவ்வாறு இருக்கையில் அனைவரும் போர் முடிவுக்கு வரும் என்று நினைத்திருந்தனர். ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தற்பொழுது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. முதலில் ரஷ்ய வெளி துறை செய்தியாளர் மரியா என்பவர், உக்ரைன் தனது இடத்தில் ரசாயணம் மற்றும் உயிரியல் ஆய்வகங்களை நடத்துவதாக உக்ரைன் மீது குற்றம் சாட்டினார்.

இவர் கூறியதை எதிர்த்து தற்பொழுது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகிதற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது இரசாயன மற்றும் உயிரியல் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்வதால் உக்ரைனில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்று ரஷ்யா நம்புகிறது. மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பது எதிர்த்து பல நாடுகள் ஏற்றுமதி இறக்குமதியை தடை செய்து வருகின்றனர்.