ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?

0
62

அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி சென்ற வாரம் இந்தியா வந்தடைந்தது. இம்மருந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கிளினிகல் பரிசோதனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபும், ரஷ்யாவில் இருக்கும் நேரடி முதலீட்டு நிதி அமைப்பும் இணைந்து இந்த கிளினிகல் பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக 10 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை ஹைதராபாத்தில் இருக்கும் ஹெட்டரோ என்கின்ற மருந்து நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளை வருகின்ற ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளதாக அந்நாட்டு நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் மருந்து வழங்குவதில் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தடுப்பூசியை உபயோகிப்பதால் 95.5 சதவீத பலன் பெற இயலும் என்று ரஷ்யா தெரிவிக்கிறது. இந்த தடுப்பூசியை வழங்கும்படி கேட்டு 20 நாடுகளில்  இருந்து ஆர்டர் வந்துள்ளதாகவும்  ரஷ்யா தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K