பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

0
76

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இரண்டு வாரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரினால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 25 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது ரஷிய ராணுவம். ரஷிய படைகள் நடத்திவரும் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே போரை நிறுத்தகோரி பல உலக நாடுகள் ரஷியாவிடம் வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும் ரஷியா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் துருக்கியில் இரு நாடுகளின் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் கூறுகையில், “உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷிய சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என்றும், அதுதொடர்பாக பின்னர் விரிவாக பேசுவதாகவும், அது சாதகமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷியாவை பலவீனப்படுத்தாது. அதற்கு மாறாக வலுவானதாகவே மாற்றும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K