டிஎன்பிஎல் முதலாவது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது திருச்சி அணி!

0
86

டிஎன்பிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. டி என் பிஎல் தொடரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக வருடந்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் சேப்பாக்கம் அணி இரண்டு முறையும், டூட்டி பேட் ரியாட்ஸ் அணி மற்றும் மதுரை ஆணி உள்ளிட்டவை ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கின்றன.

இந்த வருடத்திற்கான டிஎன்பிஎல் தொடர் சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆரம்பமானது விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த தொடர் தற்சமயம் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. 8 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் திருச்சி அணி 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியனான சேப்பாக்கம் அணி 2-வது இடத்தையும், திண்டுக்கல் அணி 3-வது இடத்தையும், கோயமுத்தூர் அணி 4வது இடத்தையும், பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. கோவை அணி அதேபோல நெல்லை உள்ளிட்ட அணிகள் சம அளவிலான புள்ளிகளை பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் கோவை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பிளே ஆப் சுற்றில் முதல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற இருக்கிறது. இந்த போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக்கம் அணி திருச்சி அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது.

தொடக்க வீரரும் அணியின் கேப்டனுமான கவுசிக் காந்தி ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார், மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 14 ரன்களுக்கு அவுட்டானார். இதன் காரணமாக ஆரம்பத்திலேயே அந்த அணி சரிவை சந்தித்தது. அப்படி இருக்க ராதாகிருஷ்ணன் அந்த அணியை மீட்டெடுத்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அவர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

54 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 82 ரன்களை சேர்த்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த சசி தேவ் 23 ரன்களை சேர்த்தார். அதன் பிறகு வந்த நடுவரிசை பேட்ஸ்மேன் சதீஷ் 29 ரன்களை சேர்த்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அணியின் ரன்னை உயர்த்தினார். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் சேர்த்து இருந்தது.154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக்கம் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. தொடக்க வீரர்கள் சந்தோஷ் சிவ் அமித் 9 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு முகமது கான் 4 ரன்களுக்கு அவுட்டானார். இதன் காரணமாக, 44 ரன்களுக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வந்தது.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த நித்திஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் உள்ளிட்டோர் மிக சீரான வேகத்தில் ரன்களை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். முதலில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடி காட்ட தொடங்கியது. மிக சிறப்பாக விளையாடிய ராஜகோபால் 3 சிக்சர்களை அடித்து இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டு 55 ரன்கள் சேர்த்தார்.

ஆட்ட நேர இறுதியில் மிக சிறப்பாக விளையாடி வந்த நித்திஷ் ராஜகோபால் திடீரென்று ரன் அவுட்டானார். அவருக்கு அடுத்த தலைமுறையை சித்தார்த் அவர்களும் 3 கண்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி வரையில் சென்று 5 பந்துகளில் 6 ரன்களையே எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதித்திய கணேஷ் கடைசி சிக்ஸர் அடிக்க 19.5 ஓவர்களில் திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றியடைந்தது. இதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆதித்யா கணேஷ் 66 தங்களை சேர்த்திருந்தார்.