தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

0
59
RSS Works with Chennai Corporation-News4 Tamil
RSS Works with Chennai Corporation-News4 Tamil

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்துடன் பொது மக்களுக்கு பல்வேறு  கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சமூக விலகல் தான் தற்போதைய தீர்வு என்ற நிலையில் அனைத்து மாநில அரசுகளும் அதை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியிருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் இந்த ஊரடங்கு உத்தரவை இந்த மாத இறுதி வரை நீட்டித்துள்ளன.

இதனையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடையும் சூழலில் பொது மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். தமிழக அரசும் இந்த ஊரடங்கு உத்தரவை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துடன் பல்வேறு கட்டுபாடுகளையும் பொதுமக்களுக்கு விதித்திருந்தது. குறிப்பாக பெரும்பாலான மாநகரங்களில் வெளியே செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், தன்னார்வலர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் மக்களை சந்தித்து நிவாரண உதவி அளிக்க கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசுக்கு எதிரான தங்களுடைய விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இணைந்து நிவாரண உதவிகளை செய்து வருவதாக கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மழை,புயல் என எந்த விதமான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆங்கங்கே தன்னார்வலர்களாக உதவி செய்வது வழக்கமானது தான் என்றாலும் தற்போது தமிழக அரசு தடை விதித்திருந்த சூழலில் நிவாரண பணியில் ஈடுபட்டு வருவது தான் விமர்சனத்திற்குள்ளானது.

இது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ChennaiCorpRemoveRSS என்ற ஹேஷ் டேக்கில் டிரென்ட் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்ததை இவர்களுக்கு சாதமாக மறந்து விமர்சனம் செய்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் கிளம்புகிறது

author avatar
Ammasi Manickam