சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

0
127
#image_title

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார்.

தற்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக குற்றம் எழுந்துள்ளது.இதுகுறித்து லஞ்சம் ஒழிப்புதுறையினர் விசாரணை செய்தனர்.

2021-ல் வேளச்சேரியில் உள்ள சொகுசு இல்லம், மாசு கட்டு பாட்டு வாரிய அலுவலகம் என 5 இடங்களில் சோதனை செய்துள்ளனர்

சோதனைக்கு பின் கணக்கில் வராத 12 லட்சம் ரூபாய் பணம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, 14 கிலோ சந்தன மரப்பொருட்கள், போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பின் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த போலீசார், வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றியுள்ளனர்.

அதே சமயம் வெங்கடாசலத்தின் சொத்துக்களை சோதனை செய்ததில், அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த போதே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார், கணக்கில் காட்டாத பணத்தின் மதிப்பு மட்டும் 6,85,37,000 கோடி என்பது தெரியவந்தது.

அவரின் அனைத்து சொத்துக்களையும். அவரது மனைவி மட்டும் மகன் பெயரில் வாங்கியுள்ளார் என்பதும் உறுதியானது. ஆனால் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை உபயோகித்து, அந்த வழக்கை முடித்துள்ளனர்.

தற்போது லஞ்சம் ஒழிப்பு துறையினர், அந்த வழக்கு மேல் முறையீடு செய்து. வெங்கடாசலத்தின் மகன், மனைவி மீது விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Jayachithra