இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பிரதமர்!

0
67

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வருடத்திற்கு 6000 ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்தவிதத்தில் இதுவரையில் 1.15 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் விதத்தில் கிசான் திட்டத்தில் எட்டாவது தவணையாக 19,000 கோடி பணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விடுவிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுக்கு இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல இன்று காலை பதினோரு மணிக்கு காணொளி மூலமாக, பிரதமர் இதுதொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று வேகமெடுத்து வருகின்றது. இந்த நிலையில், பிரதமரையும், மத்திய அரசையும் காணவில்லை என்று பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது போன்ற ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆனால் பிரதமரின் கிசான் திட்டத்தில் தான் தமிழ்நாட்டில் தகுதி இல்லாத பலர் பணம் பெற்றுக்கொண்டது அம்பலமாகி சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து அவர்களிடமிருந்து அவர்களிடம் கொடுக்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்னொரு முறை இவ்வாறு எந்த ஒரு தவறும் நடக்காத வண்ணம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

விவசாயிகளிடமும் ஏழை, எளிய மக்களிடம் மத்திய அரசு மாநில அரசு எந்த அரசின் திட்டமாக இருந்தாலும் கூட அது தொடர்பான ஆதாரங்கள் வேண்டும் என்று பல கேள்விகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனால் அவர்கள் கேட்கும் ஆதாரத்தை சாதாரண மக்களால் தயார் செய்ய முடியவில்லை. ஆனால் இதன் மூலம் ஏமாற்றி அதில் பணம் பார்க்கும் சில முதலைகள் அவர்கள் கேட்கும் ஆதாரங்களை போலியாக தயார் செய்து காண்பித்து ஏழை எளிய மக்களுக்கு செல்லவேண்டிய நிதிகளை அவர்கள் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறார்கள். இதனால் மிகவும் பாதிக்கப்படுவது என்னவோ ஏழை எளிய மக்கள்தான்.ஆகவே இது குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பு மக்களும் வலியுறுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.