Connect with us

Breaking News

செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000!! நிதி அமைச்சர் அறிவிப்பு!!

Published

on

New update about Rs 1000 per month for heads of household! Only these people have the opportunity!

செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000!! நிதி அமைச்சர் அறிவிப்பு!!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தை சேர்ந்த மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று, அறிவித்த நிலையில் பல்வேறு காரணகளால் காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், தமிழக பிரதான எதிர் கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

Advertisement

இந்த குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி பற்றாகுறையால் செயல்படுத்த முடியவில்லை என கூறிவந்ததை எதிர் கட்சிகள் , திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில், சென்ற மாதம் ஈரோடு இடைதேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும், இது தொடர்பாக பொதுமக்களோ அல்லது எதிர் கட்சிகளோ கவலை கொள்ளவேண்டாம் என்று அறிவித்தார்.

இதே கருத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் கூறிவந்த நிலையில், இன்று தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கூடியது, இதில் பட்ஜெட்டை வாசித்த நிதி அமைச்சர் தியாகராஜன், வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி மகளிர்க்கான உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அறிவித்ததும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தியாகராஜன் இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக தெரிவித்தார். மேலும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெறிவித்தார். எது எப்படியோ தங்களுக்கு வரவேண்டியது வந்து சேர்ந்தால் சரி என்று மகளிர் காத்து கொண்டுள்ளனர்.

Advertisement