அனாதை குழந்தைகளின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிய சூப்பர் முதலமைச்சர்!

0
60

இந்தியாவில் நோய்த்தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை அதன் காரணமாக, தற்சமயம் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை விட இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது .அதிலும் குறிப்பாக பல இடங்களில் தாய் தந்தை இருவரையும் இந்த நோய் தொற்றுக்கு பறிகொடுத்துவிட்டு குழந்தைகள் அனாதையாக நிற்கும் சோக நிலை அதிகரித்து வருகிறது. இதனை மத்திய, மாநில அரசுகளும் கவனித்து நோய் தொற்றினால் அனாதையாக நிற்கும் குழந்தைகள் குறித்த திட்டங்களை அறிவித்து வருகின்றன என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நோய் தொற்றினால் பெற்றோர்களை பறிகொடுத்த குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக போடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் 2-வது அலையின் காரணமாக, குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதில் அதிகமான பாதிப்பை சந்திப்பது குழந்தைகள்தான் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த நோய் தொற்றினால் தாய் தந்தையரை இழந்து நிற்கும் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அவர் உருக்கமாக கூறி இருக்கிறார்.

ஆகவே அதனைக் கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு குழந்தைகளின் நலனுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது அதன்படி நோய் தொற்றினால் பாதிப்படைந்து தாய் தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர மாநில அரசின் சார்பாக 10 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்படும். இந்த தொகையின் மூலமாக கிடைக்கப்பெறும் வட்டியை குழந்தையை வளர்க்கும் பாதுகாவலர் பெற்றுக்கொண்டு அந்த குழந்தையை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆதரவற்ற நிலைக்கு சென்ற குழந்தைகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுடைய பெயரில் இந்த வைப்பு தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றினால் ஆந்திர மாநிலத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு இந்த நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.