விவசாயிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! இன்றே கடைசி நாள் முந்துங்கள்!

0
84

தற்போது நாட்டின் வருமானம் பெறுவதற்காக மாநில அரசுகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. ஆனால் விவசாயிகளை பெரிய அளவில் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை.இதனால் விவசாயம் மிகவும் நலிவுற்று போய்விட்டது.

இதனை கருத்தில்கொண்டு மாநில அளவில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் 2வது பரிசாக 50000 ரூபாயும் 3ம் பரிசாக 40000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

ஆகவே மாநில அரசின் இந்த பரிசை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்புகொண்டு விண்ணப்ப பதிவு கட்டணம் 100 ரூபாய் மாவட்ட அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு இந்த மாத ஆரம்பத்தில் வெளியான நிலையில். விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாளென்று சொல்லப்படுகிறது. ஆகவே விவசாயிகள் இன்று மாலைக்குள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதேபோல மாவட்ட அளவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூல் தரும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக 15000 ரூபாயும் 2வது பரிசாக 10000 ரூபாயும், 3வது பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது