‘மிஸ் பன்னிடாதிங்க’ மிக முக்கியமான தகவல்!! அது எதுக்கு போட்டுருக்காங்கன்னு தெரிஞ்சிகோங்க!!

0
93

சாலையில் நாம் செல்லும் போது அதற்கு இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக போடப்பட்டு உள்ளது என்பதனை அறியாமல் பலபேர் இருக்கின்றோம். மேலும் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். இருந்தாலும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் தற்போது பல இளைய சமுதாயத்தினரும் விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக சாலை விதிமுறைகளை தெரிந்துகொண்டு வாகனம் ஓட்டினால் எந்தவித விபத்துக்களும் நேராது.

எனவே சாலை விதிமுறைகளை தெரிந்து கொண்டும், வாகனம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடிய ஒரு சாதனம் மட்டுமே என்பதை புரிந்து கொண்டு வாகனத்தை ஓட்டினால் விபத்துக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது சாலைக்கு இடையில் போடப்பட்டிருந்த கோடுகள் எதற்காக என்பதனை பற்றி காண்போம்.

பொதுவாக சாலைகளில் எப்போதுமே, கோடுகளுக்கு இடப்பக்கமாக தான் போக வேண்டும். இந்த நிலையில் வல பக்கத்திலிருந்து வண்டி எதுவும் வரவில்லை என்றால் போகலாம். ரோட்டில் ஒரே போடாக நீளம் இல்லாமல் இடைவெளி விட்டு, விட்டு போடப்பட்டு இருக்கும் பட்சத்தில் நாம் முந்திச் சென்று வலது பக்கத்தில் முந்திச் செல்லலாம். இதற்குதான் விடுபட்ட கோடுகள் போடப்பட்டிருக்கின்றன.

இடைவெளியில்லாமல் தொடர் கொடுகள் போட பட்டிருந்தால் முந்திச் செல்லக்கூடாது. மஞ்சள் கோடுகள் போட்டிருந்தால் அது ரொம்ப முக்கியமான, அவசியமான ஒன்றாகும். வலது பக்கம் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்றால் முந்திச் செல்லலாம். மஞ்சள் கோடு போடுவது எங்கெல்லாம் வெளிச்சம் கம்மியாக இருக்கும் அங்கெல்லாம் வெள்ளை கோட்டிற்கு பதிலாக மஞ்சள் கோடுகள் போடப்பட்டிருக்கும். இரண்டு மஞ்சள் கோடு ரொம்ப ஆபத்தான பகுதியில் மட்டுமே போடப்படும்.

அதற்கு காரணம் என்னவென்றால் கண்டிப்பாக முந்திச் செல்லக்கூடாது என்பதே. மேலும் மிகவும் ஆபத்தான இடங்களில் இதை குறிக்கிறது. இது அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்கள், குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் அனைவரும் விபத்திலிருந்து தப்பலாம். சாலை விதிமுறைகளை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். சாலை விதி முறைகளை கடைபிடித்தாலே விபத்துகள் எதுவும் நேராது இருக்கும்.

author avatar
Jayachithra