இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்! 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

0
78

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்! 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பேருந்து மற்றும் சிறிய வாகனம் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சாலையில் மிக வேகமாக பயணித்த பேருந்தும், அதற்கு எதிரே வந்த மற்றொரு வாகனமும் ஒன்றோடொன்று பலத்த சத்தத்துடன் மோதிக்கொண்டன. இந்த விபத்து எல்டோரடோ பார்க் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தாகும்.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலை அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தில் பயணித்த பிற பயணிகளுக்கு பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு சாலை விபத்தில் 1,37,572 பேர் இறந்தனர். அதற்கு முந்தைய ஆண்டுகளில் மொத்தமாக ஒப்பிடுகையில் 2003 ஆம் ஆண்டு 21.2 சதவீதம் இருந்த சாலை விபத்துகள் தற்போது 28.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வாகனப் போக்குவரத்து இன்றை நவீன வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. உலகெங்கும் சாலை விபத்துகள் தற்போது அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன.

விபத்தின் காரணங்களாக வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், மற்றும் வாகன ஓட்டி மது போதையில் இருப்பது, கவனம் இல்லாமல் அலட்சியமாக வண்டி ஓட்டுவது போன்றவை முக்கிய காரணமாக இருக்கிறது. விபத்தைத் தடுக்கும் முகமாக வேகக் கட்டுப்பாடு மற்றும் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு வழிமுறைகளை அரசு கையில் எடுத்தாலும் பல்வேறு சாலை விபத்துகள் அடிக்கடி நடந்தேறுகிறது.

author avatar
Jayachandiran