குழந்தைகளுக்கு அதிகம் பிஸ்கட்டுகள் கொடுக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்?

0
89

சிறிய குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனியாக பிஸ்கட் உள்ளது.அதுவும் சில குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடனே பாலுடன் சேர்த்து பிஸ்கட் தரும் வழக்கத்தை பெற்றோர்கள் வைத்துள்ளனர்.தற்போது பிளேவர் நிறைந்த நிறைய பிஸ்கட்டுகள் சந்தைக்கு வந்துவிட்டதால் குழந்தைகள் மற்ற தீனிகளை விட இந்த பிஸ்கட்டுகளை சாப்பிடவே அதிகம் விரும்புகின்றன.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிக அளவு பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிஸ்கட்களின் சுவைக்காக சுக்ரோஸ் எனப்படும் வெள்ளை சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடலின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில் சுகர் பிரீ பிஸ்கட்டுகள் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த பிஸ்கட்டில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோளமாவு ,சுகர் சிரப், போன்றவை சுவைக்காக சேர்க்கப்பட்டிருக்கும்.இதனால் உடலின் மெட்டபாலிசம் குறைவதோடு கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பிஸ்கட்டுகள் மைதாமாவில் தயார் செய்யப்படுவதால் பசியின்மை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

காலை வேளைகளில் குழந்தைகளுக்கு பாலுடன் பிஸ்கட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது அவர்களுக்கு உடலின் கொழுப்பு சக்தியை அதிகரித்து குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட காரணமாகின்றது.

குழந்தைகளுக்கு பிஸ்கெட்டுகளை அதிகம் கொடுப்பதால் செரிமானக் கோளாறுகளும் உண்டாக வாய்ப்புள்ளது.

சாதாரண பிஸ்கட்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் க்ரீம் பிஸ்கட் இன்னும் ஆபத்தானவை ஏனெனில் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ப்ளேவர்கள் மற்றும் நிறங்கள் அதிகம் ரசாயன தன்மை வாய்ந்தது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட் போன்றவற்றை கலக்கப்பட வாய்ப்புள்ளது.இந்த சோடியம் கார்பனேட் அளவுக்கு அதிகமாக உடலுக்குள் சென்றால் குழந்தைகளுக்கு சிறுநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

முடிந்தளவுக்கு குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்த பெரியவர்களுக்கும் இயற்கை உணவை அல்லது வீட்டில் செய்த உணவை சாப்பிட கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.வளரும் குழந்தைகளுக்கு அதிக அளவு பிஸ்கட்டுகள் கொடுப்பதை தவிர்த்து கொள்வது அவர்களின் உடல்நலத்தை பாதுகாப்பதாகும்.

author avatar
Pavithra