தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

0
185
Rice price rise to compensate for gold? Shock news released by the Department of Agriculture!
Rice price rise to compensate for gold? Shock news released by the Department of Agriculture!

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

தென்னிந்திய உணவு வகைகளில் அரிசி சாதம் தான் முக்கிய இடம் வகித்து வருகின்றது. இதில் தமிழகத்தின் அரிசி தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆந்திர மாநிலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலை ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளது. அதனால் அரிசியின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியை சேர்ந்த வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு சந்தையில் பாரம்பரிய மிக்க நல்லநெல்  ரகங்கள் ஏராளமானவை புத்துயிர் பெற்றுள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளது. இந்நிலையே  நீடித்தால் அடுத்த சில மாதங்களில் அரிசியின் சில்லறை விலை கிலோவிற்கு ரூ 10 உயரும் என அரிசி ஆலை அதிபர்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது தேவை குறைந்ததால் அதிக அளவில் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மார்க்கெட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் அவற்றின் இருப்புகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. பிற மாநிலங்களில் இருந்து நெல்வரத்து தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே ஆந்திர மாநில நெல் ரகமான பிபிடி 5204 மற்றும் தெலுங்கானாவின் நெல் ரகமான ஆர் என் ஆர் ஆகியவற்றின் வரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நுண்ணிய நெல் வகைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆலைகளின் நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. அதனால் பிரபலமான அரிசி வகைகளின் சில்லறை விலை இந்த ஆண்டு கிலோவிற்கு 50 ல்லிருந்து ரூ 60 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K