ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

0
101
Resolution has come at the all party meeting to open the Sterlite plant !! Turbulent public !!
Resolution has come at the all party meeting to open the Sterlite plant !! Turbulent public !!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் மனுதாக்கல் செய்த்தது. அந்த மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்தது, இந்த கொரோனா பரவாலால் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையில்  ஆக்சிஜன்  தயாரித்து தருவதாக கூறி ஆலையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சியானது ஸ்டெர்லைட் ஆலை மூட போராடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனுவிற்கு மத்திய அரசு  ஒப்புதல் அளிக்குமாறு உயர்நீதி மன்றத்திடம் கூறியுள்ளது. இதன் விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைப்பெற்றது  வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 1000 டன் ஆக்சிஜன் தயாரித்து தரப்படும். இந்த 1000 டன் ஆக்சிஜன் முழுவதும் வேதாந்தா நிறுவனம் இலவசமாக வழங்கும் என்று குறிப்பிட்டார். மேல் விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலை நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரித்து தரப்படும். இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை. திறக்க எதிப்புதெரிவித்தது. அதற்கு உச்சநீதிமன்றம் ஏன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடாது. என்பதர்க்கன விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பகுதி  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திள்ளனர். இதனால் ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்தின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம் என தீர்மானம் வந்துள்ளது.

author avatar
CineDesk