ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

0
56

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் கூட்டத்தில், ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனிடையே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டம்  கடந்த மூன்று நாளாக நடைபெற்று வந்தது. இந்த ஐ.நா. பொதுச் சபையில் ரஷியா உக்ரைனுக்கு எதிராக தொடுத்துள்ள போரை  உடனடியாக நிறுத்தி, அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அமைதியான வழிமுறைகள் மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு ஐ.நா. பொதுச் சபையில் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சில நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 141 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஐந்து  நாடுகள் எதிராக வாக்களித்தன. அதில் 35 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

author avatar
Parthipan K