ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

0
139
Reserve Bank's new order! Action will be taken against violators?
Reserve Bank's new order! Action will be taken against violators?

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது. அவை கடன் தவணை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை தற்போது மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  இந்நிலையில் வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய தங்கள் கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எவ்வித வகையிலும் உடல் ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ துன்புறுத்தலில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அநாகரிகமாக எவ்வித குறுந்தகவலையும் பயனர்களின்  தொலைபேசி எண்ணிற்கு அனுப்பக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது கடன் செலுத்துமாறு இரவு ஏழு மணிக்கு பிறகு காலை 8 மணிக்கு முன்பு தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் அறிவித்துள்ளது.

இந்த புதிய உத்தரவுகளை மீறும் அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைக்கு பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

author avatar
Parthipan K