தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்காகவும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் மாநிலம் முழுவதும் வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த  வாக்குப்பதிவின் போது சில இடங்களிலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகளால் புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு புகாருக்கு உள்ளான 46 வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை மற்றும் குளறுபடிகள் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விரிவான அறிக்கையை அளித்தார்.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த அறிக்கையின் படி புகார்கள் பதிவு செய்யப்பட்ட இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்ததது.எனினும் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புகாருக்கு உள்ளான 13 வாக்குச்சாவடிகளில் தமிழகத்தில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தருமபுரி தொகுதியில் 8 வாக்கு சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குசாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடைபெற்றாலும் தேர்தல் முடிவை வெளியிடும் நாளில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கபடுகிறது.


error: Content is protected !!
WhatsApp chat