மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி! கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு 

0
91

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி! கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி, ரெப்போ (வட்டி) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 5.4 சதவீதமாக உயர்த்தி உள்ளது.ஏற்கனவே பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க இருமுறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ என்பது ரிசர்வ் வங்கி அதற்கு கீழுள்ள வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி இந்த கடனுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்களான மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளது.

அதன் அடிப்படையில் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.