இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

0
67

சமீபத்தில் பாதுகாப்பு கருதி சீனா தொடர்புள்ள 59 மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான டிப்டாப் ஆப்பும் மேலும் இதுபோல சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான சில அப்ளிகேஷன்களும் தடைசெய்யப்பட்டன. இதனையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சில ஆப்கள் மீண்டும் இந்தியாவிற்கு செயல்பாட்டிற்கு வருமா என்று அதன் பயனாளர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக் டாக் அப்ளிகேஷன் செயல்பாட்டை இந்தியாவில் கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்க முயற்சிக்கும் நிலையில் அதற்கு ஆதரவாக அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் வரும் 15 ஆம் தேதி வரை டிக் டாக் செயலியின் நிர்வாகத்திற்கு கேடு விதித்துள்ளார்.  அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் முயற்சித்து வரும் சூழலில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.

அண்மையில், டிக்டாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர், டிக்டாக் இந்தியா பிரிவில் ஒரு பங்கை ரிலையன்ஸ் வாங்க ஆர்வமாக உள்ளதா என்பதை அறிய மூத்த ஆர்ஐஎல் நிர்வாகிகளை அணுகியதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து இந்த சூழலில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா அல்லது எதாவது ஒரு பகுதியை கையகப்படுத்துவது குறித்து ரிலையன்ஸ் தரப்பும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும், ஊகம் மற்றும் வதந்திகள் என்று கூறப்படும் இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க ரிலையன்ஸ் தரப்பில் மறுத்துள்ளனர். தற்போதைய சூழலில் டிக்டாக்கின் வணிகம் சுமார் 2.5-5 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது,மேலும் தற்போதைய சூழலில் நிலவும் நெருக்கடிகளால் இந்த நிறுவனத்தின் மதிப்பு குறைந்துள்ளது.

இதனையடுத்து உலக அளவில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் டிக்டாக்கின்சந்தை  மதிப்பீடு மேலும் குறையும் வரை ரிலையன்ஸ் தரப்பு’காத்திருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையே திடீர் திருப்பமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வரும் இந்த சூழ்நிலையில் மற்றொரு இந்திய நிறுவனமான சஞ்சீவ் கோயங்கா குழுமமும் டிக்டாக் செயலியை வாங்க ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.