விரைவில் வருகிறது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்..! – ரிலையன்ஸ் ஜியோவின் பலே ப்ளேன்..!

0
170

அடுத்த ஆண்டிற்குள் மலிவு விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை 2ஜி, 2ஜி சேவைகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சேவையால் வாடிக்கையாளர்களை கட்டி இழுத்தது. அறிமுகமான ஓராண்டில் இலவச சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்க பிற நெட்வொர்க்வாடிக்கையாளர்களும் அம்பானி பக்கம் திரும்பினர்.

இதனால் முன்னணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டன. தனது வாடிக்கையாளர்களை ஜியோவிடம் இழந்த ஏர்டெல் நிறுவனமும், அதிரடி இலவச சேவைகளை அறிவித்ததுடன் 4ஜி சேவையையும் வழங்கியது.

இந்த நிலையில் டெலிகாம் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 2022ம் ஆண்டிற்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரட்டி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க திட்டமிட்ட அம்பானி அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவை பிரிவில் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற திட்டமிட்ட முகேஷ் அம்பானி, 2022ம் ஆண்டின் 2வது காலாண்டில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ஜி, 3ஜி சேவையில் உள்ள வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்றுவதே தனது இலக்கு என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது கூட்டணியில் உள்ள கூகுளுடன் இணைந்து மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பு பணியில் இணைந்துள்ள ஜியோ நிறுவனம் அதற்கான பணிகள் ஜூன் மாதத்தில் முடியும் என தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை சந்தைக்கு வரும்.

இதனிடையே ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில், மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk