யூரிக் அமிலத்தை முற்றிலும் குறைத்து மூட்டு வலி வீக்கம் கை கால் முகம் வீங்குதல் சரியாக!

0
390
#image_title

யூரிக் அமிலத்தை முற்றிலும் குறைத்து மூட்டு வலி வீக்கம் கை கால் முகம் வீங்குதல் சரியாக! 

ரத்தத்தில் படிந்து இருக்கக்கூடிய யூரிக் அமிலத்தை குறைத்து அதனால் ஏற்படக்கூடிய மூட்டு வலி வீக்கம், மூன்று வாதம், பாத வலி, பாத எரிச்சல், முகம் கை, கால் வீங்குதல் இந்த பிரச்சனை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு அளிக்கக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

முதலில் யூரிக் அமிலம் என்றால் என்ன? அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சாதாரணமாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மில்லி கிராம் வரையிலும் ஆண்களுக்கு 7 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால் அது இயல்பு நிலை. இதுவே அதிகரிக்க தொடங்கும் பொழுது நமது உடல் உள்ளுறுப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

தற்போது இருக்கக்கூடிய உணவு பழக்க வழக்கங்கள், அதிக மது அருந்துதல்,  சிக்கன் அதிக அளவில் சாப்பிடுதல், அதாவது ப்யூரின் நிறைந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக நமது ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இது நாளடைவில் நமது மூட்டுகளில் படிமங்களாக படிந்து பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

அதேபோல் அதிகமான யூரிக் அமிலம் கலந்த ரத்தம் சிறுநீரகத்திற்கு வரும்பொழுது அதில் உள்ள செல்கள் அழிக்கப்பட்டு சிறுநீரக கற்கள் உருவாகின்றன. இதனால் நெஃப்ரான் பகுதி சுருங்கி சிறுநீரகப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு சிறுநீரகமே செயல்படாமல் போகக்கூடிய நிலைமை ஏற்படலாம்.

இதனால் சிறுநீரகம் வழியாக வெளியேறக்கூடிய கழிவுகள் வெளியேறாமல் ரத்தத்தில் மிதக்க ஆரம்பித்து கை, கால் முகம் வீங்குதல், மூட்டு வலி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்க்கவும். அடுத்து இதனுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு சேர்க்கவும். சுக்கு இல்லை எனில் பிரஷ் ஆன இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த பானத்தை இரவில் குடிக்க கூடாது.

இதனை அடுப்பில் வைத்து ஒன்றரை டம்ளர் முக்கால் டம்ளராக மாறும் அளவுக்கு நன்கு கொதிக்க விடவும். பின்னர் இறக்கி வைத்து சிறிது ஆறியதும் பருகலாம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து டீ, காபி சாப்பிடலாம். அதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதே போல் 7 நாட்கள் தொடர்ந்து செய்து வர ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு குறைந்து மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் அறவே நீங்கும்.