மைதானத்தில் எச்சில் துப்பினால் ரெட் கார்டு

0
60
கொரோனா  தொற்று காரணமாக  ஐரோப்பாவில் பார்வையாளர்கள் இல்லாமல்  கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன வீரர்களுக்கு யாரும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் யாரும் மைதானத்தில் எச்சில் துப்பக்கூடாது மேலும் கட்டிப்பிடித்தல் கூடாது அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்த ஒரு வீரரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தின் அருகாமையில் இருமினாலும் நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றவோ மஞ்சள் அட்டை கொடுக்கவோ நடுவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிமுறை செய்துள்ளது.
author avatar
Parthipan K