அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கவிருக்கும் கனமழை!

0
65

கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் கன மழை தொடர்ந்து வருவதால் குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் மிகவும் கடுமையாக பெய்து வருகிறது. ஆகவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி இருக்கின்றன. தெலுங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 15க்கும் மேற்பட்டோர் மழை காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஹரியானா. உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஒடிசா மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நிலை வருகிறது.அதோடு மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகி ஜூன் மாதம் பெரும்பாலான பகுதிகள் மழை பெறாத சூழ்நிலையில், ஜூலை மாதம் நாட்டின் பெரும்பாலான வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.