தொடர் கனமழை இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
69

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதோடு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவே வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும், சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தமிழ்நாடு, புதுவை, உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

இதைத் தவிர இன்றைய தினம் திருப்பூர், திண்டுக்கல், தேனி, கோவை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழையும். ஈரோடு. தர்மபுரி. கிருஷ்ணகிரி. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நீலகிரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமுதல், மிக கனமழையும், கரூர், திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், சேலம்m ராணிப்பேட்டை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை கோயம்புத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமுதல் அதிகனமழையும், கிருஷ்ணகிரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், நெல்லை, குமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, போன்ற மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதிகனமழை வரையில் பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை ஆரம்பத்ததிலிருந்து கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நேற்று வரையில் தமிழகத்தில் 12.5 சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் தொடர் கனமழை காரணமாக, இயல்பை விட தமிழகத்தில் 94 சதவீதம் அதிகமாக அதாவது 24 cm மழை பதிவாகி இருக்கிறது.

இயல்பை விட அதிகமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது நேருக்கு திசை காற்று வலுவடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மோதுவதாலும், ஈரப்பதம் காற்றில் இணைவதாலும், மேற்கு தொடர்ச்சி மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் சென்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் இயல்பை விட அதிகமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.