Reason for Thanjavur DMK Candidate Change-News4 Tamil Online Tamil News Channel
Reason for Thanjavur DMK Candidate Change-News4 Tamil Online Tamil News Channel

அரசியலுக்காக அரசு மருத்துவர் வேலையை விட்ட அஞ்சுகம் பூபதியை ஏமாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய காரணம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சுகம் பூபதிக்கு தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேர்தலில் நிற்பதற்காக தான் வகித்து வந்த அரசு மருத்துவர் வேலையை உதறிவிட்டு வந்தவருக்கு திமுக தலைமை தற்போது வாய்ப்பு தராமல் ஏமாற்றியது சொந்த கட்சியினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இவ்வாறு ஏமாற்றியிருக்கமட்டார் என கட்சியினரும் அவரது குடும்பத்தினரும் புலம்பி வருகின்றனர்.

மக்களவை தேர்தலுக்காகவும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு எஸ்.எஸ் பழனி மாணிக்கம் என்பவரும்,சட்டமன்ற தொகுதிக்கு டி.கே.ஜி நீலமேகம் என்பவரும் நிற்பதாக அறிவித்துள்ளார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு அஞ்சுகம் பூபதி, டி.கே.ஜி நீலமேகம் மற்றும் சண்.ராமநாதன் என்பவர்களுக்கிடையே போட்டி நிலவினாலும் கடந்த முறை தேர்தலில் நிற்பதற்காக அரசு பணியை துறந்த அஞ்சுகம் பூபதிக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் டி.கே.ஜி நீலமேகம் என்பவரை வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அஞ்சுகம் பூபதி குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் திமுக தலைமை மீது கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் இதற்கான காரணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சுகம் பூபதியை நேரில் அழைத்தே கூறியுள்ளதாக தெரிவித்துள்ளர்கள்.அதில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வினர் பணத்தால் அடித்து நம் வெற்றி வாய்ப்பை பறித்தனர். இந்த முறை அ.தி.மு.க., அ,ம,மு,க என இரு பிரிவுகளாக நிற்பதால் தேர்தலில் பணம் பெரிய அளவில் விளையாடும் இதை உங்களால் தாங்க முடியாது. கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளும் உங்களுக்கு எதிர்ப்பாக உள்ளனர். அதனால் இந்த முறை வாய்ப்பு வேறு ஒருவருக்குத்தான். உங்களை நான் நிச்சயம் கைவிட மாட்டேன் பெரிதாகச் செய்வேன் கவலை கொள்ள வேண்டாம் என அஞ்சுகம் பூபதிக்கு அன்பான ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்துள்ளாராம் திமுக தலைவர் ஸ்டாலின்.

கடந்த காலங்களில் வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றிய விமர்சனங்கள் பரவலாக எழுந்தது ஆனால் தற்போது திமுக தலைவரே பணத்தை காரணம் காட்டி ஒரு வேட்பாளருக்கு வாய்ப்பு தராமல் தவிர்த்துள்ளது அரசியலுக்கு பணமே முக்கியம் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது. மேலும் இவ்வாறு பணத்தை பெருமளவு செலவு செய்து வெற்றி பெரும் திமுக வேட்பாளர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா? அல்லது செலவு செய்த பணத்தை எடுக்க முயற்சிப்பர்களா? என்ற சந்தேகம் அரசியல் அறிந்த மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Reason for Thanjavur DMK Candidate Change