கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதியானதிற்கான காரணம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதியானதிற்கான காரணம்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள  பங்களாவில் ஒரு கொள்ளை கும்பல் நுழைந்து அங்கு பணியில் இருந்த காவலாளியான ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு,அவருடன் பணிபுரிந்த  மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரையும் தாக்கிவிட்டு சென்றது.மேலும் அங்கிருந்த சில பொருட்களையும் அந்த கும்பல் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பங்களாவில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் என்பவரும் சேலம் அருகே மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்தார். அதே நேரத்தில் இந்த விவகாரம் சம்பந்தமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியான சயன் என்பவரும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்யப்பட்டது, அங்கிருந்த பொருள்களை திருடியது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் இறந்தது சம்பந்தமாக தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மாத்யூ ஒரு வீடியோ காட்சியை டெல்லியில் வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அந்த வீடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் இறந்ததற்கும் தற்போதைய தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இவ்வாறு தமிழக முதல்வரை குற்றம் சாட்டி வெளியான அந்த வீடியோ காட்சி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தமிழக அரசு சார்பாக வீடியோ காட்சியை வெளியிட்டவர்கள் மீது புகார் செய்யப்பட்டு அவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆரம்பத்தில் வலியுறுத்தி வந்தார்.ஆனால் அவருக்கு பதிலளிக்கும் விதமாக சாதிக் பாஷா மற்றும் அண்ணா நகர் ரமேஷ் வழக்கையும் விசாரிக்கலாமா என்று ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் சி வி சண்முகம் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பிறகு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து பேசுவதை ஸ்டாலின் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரத்தில் செயல்படாமல் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Copy
WhatsApp chat