அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து முதல் ஆண்டிலேயே ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்துள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ பிராண்ட் என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மே மாதம் முதல் விற்பனையை துவங்கிய நிலையில் இந்நிறுவனத்தின் புதிய மாடல் டிசம்பர் மாதத்திற்குள் ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக ரியல்மீ பிராண்ட் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனத்தின் மற்ற நிறுவனங்களாகிய சியோமி மற்றும் சாம்சங் உள்பட பல நிறுவனங்கள் இந்தியசந்தையில் போட்டியில் இருக்கும் நிலையில் புதிதாக நுழைந்த ஒரு நிறுவனம் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பிராண்ட் தற்போது நான்காவது இடத்தில் இருப்பதாகவும், விவோ மற்றும் ஓப்போ ஆகிய நிறுவனங்கள் கூட முதல் ஆண்டிலேயே இவ்வளவு அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரியல்மி பிராண்ட் சர்வதேச அளவில் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மேலும் சில முக்கிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்திய சந்தையை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

Copy
WhatsApp chat