பெங்களூரு விடம் விழுந்தது லக்னோ! 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

0
73

ஐபிஎல் தொடரின் வெளியேற்றப்பட்டவர்களுக்கான சுற்று கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் லக்னோ அணியும் பெங்களூரு அணியும் சந்தித்தனர் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 112 ரன்களை சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்தை சந்தித்து 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்க ஆட்டக்காரர் டி.காக் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி வழங்கினார். மனன் வோரா19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பொறுப்புடன் விளையாடி அரைசதமடித்தார். அவருக்கு தீபக் ஹூடா நன்றாகவே ஒத்துழைப்பு வழங்கினார்.

அவர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னீஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். தனி மனிதனாக போராடிய கேப்டன் கேஎல் ராகுல் 79 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலமாக 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக, 2வது தகுதி சுற்றுக்கு அந்த அணி முன்னேறியிருக்கிறது.

இந்த தோல்வியின் மூலமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது லக்னோ அணி மேலும் 4வது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

பெங்களூரு அணியின் சார்பாக ஹேசில் வுட் 3 விக்கெட் ஹசரங்கா,ஹர்ஷல் பட்டேல் சிராஜ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.